Kavithai

தமிழ் கவிதை தூரலவள் (Tamil Kavithai Mazhai Thooral)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)

தமிழ் கவிதை தூரலவள்

தமிழ் கவிதை தூரலவள்

மழைச்சாரலிலே நான் நடந்தேன்

தூரலவள் என்னைத் தொடர்ந்தாள்..

தொட்டு விட துரத்துகின்ற

தூரலவளிடம் விட்டு

விலகி ஓடினேன் வேண்டுமென்றே…

துரத்துவதற்கு துணையாய்

தோழியாம் காற்றையும் அழைத்துக் கொண்டாள்..

நான் ஓட அவள் துரத்த

துரத்தலில் தோற்றுப் போனேன்..

நனைத்துவிட்ட நங்கை அவளோ

நமட்டு சிரிப்புடனே

விலகிச் சென்றாள் விரைவுடனே..

நனைந்து விட்ட நானுமே

நனைத்து சென்ற நங்கை அவளை

எட்டிப்பிடிக்க எத்தனித்து

கட்டிலிலிருந்து கண்விழித்தேன்…

நன்றி – மகா.சுரேஷ்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்

இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *