தமிழ் கவிதை முரண்பாடு (Tamil Kavithai – Muranpadu)
கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)
அவள் லட்சுமி
இன்னும் மூணு மாசம்
ஃபீஸ் பாக்கி
சரஸ்வதி அக்கா
இப்போ என் வகுப்பில் படிக்கிறாள்
ஆரோக்கியநாதன் ஆப்செண்ட்
இந்த வாரமும் ஜுரம்
அன்பழகன் பீ.டீ சாரிடம்
இரண்டுமே இல்லை
சாந்தி டீச்சர்
சால்க் பீஸு இல்லாமல்
வகுப்புக்கு வந்த நாட்கள் உண்டு
ஆனால் பிரம்பு இல்லாமல்
உஹும் …
இத்தனை பொய்களுக்கு மத்தியில்
நான்: சத்ய பிரியா- 5 ‘B’ !
நன்றி – N (உள்) ராம்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..

.jpg)