Agriculture

இறப்பர் பயிர்ச் செய்கை – Rubber Cultivation

இலங்கையில் இறப்பர் பயிர்ச் செய்கை

இறப்பர் பயிர்ச் செய்கை

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1877 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இறப்பர் பயிர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அக்காலப் பெருந்தோட்ட உற்பத்தியாளர்கள் தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டிருந்தமையால் இறப்பர் மீது கவனம் செலுத்தவில்லை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனக் கைத்தொழில் அபிவிருத்தியடைந்தமையால் இறப்பரின் விலை கூடியது. இலங்கைக்குப் பொருத்தமான இறப்பர் இனத்தை அறிந்து அதற்குப் பொருத்தமான தொழினுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டமை, தேயிலை விலை தற்காலிகமாக வீழ்ச்சி கண்டமை போன்ற காரணங்களால் இறப்பர் பயிர்ச் செய்கை வேகமாகப் பரவலடைந்தது. ஆரம்பத்தில் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் பயிரிடப்பட்ட இறப்பர் பிற்காலத்தில் சப்ரகமுவ, மேல். தென் மத்திய மாகாணங்களிலும் பரவலடைந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 30 வீதம் இறப்பர் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் அகலவத்த என்னுமிடத்தில் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு இறப்பர் பயிரின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் இறப்பர் உற்பத்தி

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இலங்கையின் இறப்பர் பயிர்செய்கையானது பாதுகாத்து வளர்க்க வேண்டிய ஒரு துறை. இன்றும் சுமார் ஐந்து இலட்சம் பேர் இறப்பர் பயிர்ச்செய்கையில் தங்கியுள்ளனர். இறப்பர் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இன்று இறப்பர் உற்பத்தி பாரியளவில் குறைந்துள்ளது.
இலங்கையின் இறப்பரை நாம் மூலப்பொருளாக அனுப்பாமல் இறப்பர் உற்பத்தி பொருட்களாக ஏற்றுமதி செய்வது இலாபகரமான ஒன்று. அந்தவகையில் நாம் அதிஷ்டசாலிகள். நூற்றிற்கு 75 வீதமான இறப்பர், முடிவுப்பொருட்களாகவே ஏற்றுமதியாகின்றன. அதனை 100 வீதமாக அதிகரிக்க நாம் விரும்புகின்றோம். தற்பொழுது இறப்பர் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால், இறப்பர் பொருட்களை தயாரிப்போரும் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதனால் இன்று இறப்பர் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
200,000 ஹெக்டேயரில் காணப்பட்ட இறப்பர் உற்பத்தி, 132,000 ஹெக்டேயராக குறைவடைந்துள்ளது. இதனை நாம் அதிகரிப்பது அவசியம். ஆகையால் வழமையாக இறப்பர் பயிர்செய்கையை மேற்கொள்ளும் இடங்களுடன் வேறு இடங்களிலும் இறப்பரை பயிரிடுகின்றோம். இறப்பர் உற்பத்தி செய்யப்பட்ட நிலங்கள் இன்று வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக முள்ளுத்தேங்காய் வளர்ப்பிற்கு 11,000 ஏக்கர் இறப்பர் நிலம் சென்றுவிட்டது. அதிவேக நெடுஞ்சாலை அமைக்கவும் இறப்பர் உற்பத்தி நிலங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இறப்பர் உற்பத்தி நிலங்கள் சுவீகரிக்கப்டுகின்றன.
ஆகவே மொனறாகலை, அம்பாறை போன்ற பகுதிகளில் இறப்பர் மரங்களை வளர்ப்பத்தில் நாட்டம் காட்டியுள்ளோம். காலநிலையும் இதற்கு கைகொடுக்க வேண்டும். ஆனால் காணிப்பிரச்சினை அங்கும் உள்ளது. மகாவலி மற்றும் வனவள திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களே அங்கும் உள்ளது. அந்த நிலங்களில் இறப்பர் வளர்க்க முடியாது. ஆகவே அங்கும் சிறிது சிறிதாகவே இறப்பர் மரங்களை வளர்க்க முடிகின்றது.

இலங்கையின் இறப்பர் உற்பத்தி பொருட்கள்.

வெளிப்படையாகத் தெரிகின்ற குளியலறை விரிப்பு அல்லது வெளிப்படையாகத் தோற்றமளிக்காத ஜாடி மூடி வளையம் என இறப்பர் உற்பத்திகள் எதுவாக இருப்பினும் பல்வேறு தொழிற்துறைகளுக்கு அவை பயன்மிக்கவையாக அமைந்துள்ளதுடன், அன்றாட வாழ்க்கையில் பாரிய அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இயற்கை இறப்பர் மற்றும் PVC மற்றும் EVA உட்செலுத்தல் போன்ற நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்புடன் DSI சாம்சன் குழுமத்தின் துணை நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தர நடைமுறைகளை விஞ்சும் உயர் தர இறப்பர் உற்பத்திகளை தயாரித்து வருகின்றன.
குழுமத்தின் துணை நிறுவனங்களான சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி ஆகியன உயர் தர இறப்பர் பாகங்களையும், குழுமத்தின் பாதணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இறப்பர் செருப்புக்கள், பாதணி உள்ளங்கால் பாகங்கள் மற்றும் பாதணி குதிக்கால் பாகங்கள் போன்ற உற்பத்திகளையும் தயாரித்து வருகின்றது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜாடி மூடி 

இறப்பர் பயிர்ச் செய்கை

PVC  இறப்பர்

இறப்பர் பயிர்ச் செய்கை


Tyre 


இறப்பர் பயிர்ச் செய்கை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *