தமிழ் கவிதை இது காதல் என்று உணர்ந்தேன் (Tamil Kavithai I Felt it Was Love)
கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)
தமிழ் கவிதை இது காதல் என்று உணர்ந்தேன்..!
வர்ணிக்க வார்த்தை இல்லாத போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
வரிகள் யாவும் உன் நினைவை விட அழகில்லை என்ற பொழுது… இது காதல் என்று உணர்ந்தேன்..
உன் நினைவு என்னை நிழலாக தொடர்ந்த போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
இரவில் கூட.. ஆம்.. காதல் நிழலாக இருக்குமோ.. ம்ம்.. உன் நினைவில் நிழல்…
வானம் எங்கும் நட்சத்திரம்.. உன் பேரை சொல்லி சொல்லி.. உன்னை வர்ணித்து நிலவை பார்த்த போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
சிறு பிரிவும் வருத்திய போது … இது காதல் என்று உணர்ந்தேன்..
சிறிய நேரம் நீ தழுவிய போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
என் உடைமைதன்னதில்… இது காதல் என்று உணர்ந்தேன்..
உன் கண்களில்… இது காதல் என்று உணர்ந்தேன்..
கண்ணில் நீர் ததும்பிய போது… அது உன்னால் என்ற போது …இது காதல் என்று உணர்ந்தேன்..
கண்ணீரை போக்க நீ செய்த செயல்களில்… இது காதல் என்று உணர்ந்தேன்..
எதிர்காலத்தை எண்ணி பயந்த போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
என் பயத்துக்கு நீ மருந்தான போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது என்பது புரிந்த போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
உன்னால் என்னில் கூட ஒரு வைரமுத்து இருப்பதை கண்டபோது… இது காதல் என்று உணர்ந்தேன்..
இந்த மம்முத கிறுக்கு தீராத போது… இது காதல் என்று உணர்ந்தேன்..
அனைத்திற்கும் காரணம் நீ.. என்ற போது… இது காதல் என்று உணர்ந்தேனடி..
நீயே.. என் காதலி.. என் கண்மணி.
நன்றி – KIRUPASHREE.V
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..

.jpg)