Kavithai

தமிழ் கவிதை காதல் புனிதமானது (Tamil Kavithai Kadhal Punithamanathu)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)

தமிழ் கவிதை காதல் புனிதமானது

தமிழ் கவிதை காதல் புனிதமானது

புத்திசாலிகள் முட்டாள்தனமாக செய்வது காதல் 

முட்டாள்கள் புதிசாலித்தனமாக செய்வதும் காதல் 

காதல், மனிதர்கள் வாழ்வில் ஒட்டிக் கொள்ளும் ஒரு அங்கம் 

அங்கத்தில் ஒட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தால் நீ  ஒரு தங்கம்

இருமனம் கொண்ட காதல் வாழ்க்கை என்பது 

அடிகரும்பிலிருந்து நுனிக்கரும்பை ருசிப்பது   

திருமணம் கொண்ட காதல் வாழ்க்கை என்பது 

நுனிக்கரும்பிலிருந்து அடிகரும்பை ருசிப்பது  போன்றானது  

வேண்டாம் என்ற காதலை வேண்டும் என்று மதிகொண்டு சேர்ந்தாய்,

வேண்டாம் வாழ்க்கை என்று விதிகண்டு பிரிந்தாய்

இரண்டாய் இருந்தவர்கள் ஒன்றாய் சேர்ந்ததால்  காதல் இன்பமானது

ஒன்றாய் இருந்தவர்கள் இரண்டாய் பிரிந்தால்  காதல் துன்பமானது

இரண்டோடு மூன்றும் சேர்ந்து வாழ்ந்தால் காதல் புனிதமானது 

நன்றி – Prapanchadasan Sathya

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்

இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *