Kavithai

தமிழ் கவிதை அவள் மீது கொண்ட அன்பு (Tamil Aval Meethu Konda Kadhal)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)

தமிழ் கவிதை அவள் மீது கொண்ட அன்பு

தமிழ் கவிதை அவள் மீது கொண்ட அன்பு 

மௌனம் கூட மொழியானது என்னவளின் 

கண்கள் என்னை பார்க்கையில்……!

மது தந்த போதையை விட என்னவளின் 

இதழ்கள் தீண்ட அடிமையாகினேன்

 இன்று வரை மீள முடியவில்லை 

என்னவள் தந்த ஈர முத்தத்திற்கு…..!

படைத்த பிரம்மன் அறிவானோ 

இல்லையோ உன் அழகு என்னவென்று…..!

ஏனோ உன் அழகை ரசிக்கவே 

என்னை இவ்வுலகில் படைத்துவிட்டான்…..!

என்னவளின் மெல்லிடையை

போர்த்திக்கொள்ளும் சேலையாக இருக்க

 எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருந்தால் 

என் உயிரை நேய்து இருப்பேன்

 சேலையாக வரம் பெற்று இருப்பேன்….!

எல்லை இல்லா கடல் போல என் உயிரை 

முழுவதுமாக கொடுத்துவிட்டேன்……..!

அவள் காட்டும் அன்பிற்கு உரித்தாகிவிட்டேன்…..!

தாய்க்கு நிகராக மனதில் அவளை பதித்துவிட்டேன்…..!

இன்று வரை சொல்ல முடியவில்லையா 

அல்லது சொல்ல தெரியவில்லையா

 என்று தெரியவில்லை எனக்கு 

அவள் மீது கொண்ட அன்பு என்னவென்று…..! 

நன்றி – S. Afrin Banu

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்

இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *