தமிழ் கவிதை தூவல் (Tamil Kavithai Thooval)
கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)
தமிழ் கவிதை தூவல்
அனலியவன் கரங்களின்
தீண்டலால் கருகும்
உயிர்களை காக்க
நீ வா தூவலே!
காய்ந்து வெடித்த தரணியவள்
உன்னைத் தழுவிட
ஆசைக் கொண்டுள்ளாள்
அவளை அரவணைக்க
நீ வா தூவலே!
உந்தன் நேசம்தனை தக்கவைத்துக்
கொள்ள தவறிய மூடர்களாய்
மீண்டும் உன்னிடம் கையேந்தி
நிற்கின்றோம் எங்கள் மீது
கருணை பொழிய
நீ வா தூவலே!
நன்றி – ப.அகத்தீஸ்வரன் அரங்கூர்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்

.jpg)