அன்பானவள் Anpanaval
கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)
தமிழ் கவிதை அன்பானவள்
எப்போதுமே தேவதையவள்
எல்லோரும் வெறுத்தாலும்
என்னை அன்பால்ஆசிர்வதிப்பவள்…
கபடமில்லாத உள்ளமவள்….
கருணையில் வெள்ளமவள்…
போ’ என்னும் வார்த்தையால்…
‘வா’ என்றும்சொல்லிடுவாள்…
ஆம் அன்பான அன்னையவள்
அனுதினமும் தொல்லைதரும் பிள்ளைநான்…
இயற்கைத்தந்த அறம்போல
இனியவள் அன்பென்னும் வரம் தந்தாள்
அவள் பொய்யான கோபங்கள்
என் மெய்யான புன்னகையில்
பொலிவிழந்துப்போய்விடும்
ஆம் கோபம்கொண்டாலும் அன்னையவள்….
குழந்தைதனமாற பிள்ளையவள்…
குறையில்லாத மனிதன்
நானென்று கூறவில்லை…..
நிறைவான அவளன்பு
கோபத்தால் மாறபோவதில்லை
ஆம் அடிக்கடி சண்டையிடுவேன்
ஆனாலும் அவள்முகம் காணாமல்ப்போனால்
எங்கேயென்று தேடிடுவேன்…
இல்லையென்றால் முகம் வாடிடுவேன்…
எப்போதுமே தேவதையவள்
எல்லோரும் வெறுத்தாலும்
என்னை அன்பால் ஆசிர்வதிப்பவள்…
நன்றி – மு.கார்த்திக்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்

.jpg)