தமிழ் கவிதை பெண்மையின் மேன்மை – Tamil Kavithai Penmai
கற்காலம் தொட்டு இப்பொற்காலம் வரை மண்ணில்
மகளிராய் பிறப்பெடுத்து பெற்று சவால்களை
சாதனையாக களம் கண்ட கண்ணியம் நீ…….
அறிவு கொண்ட பெண்களே பிற்போக்கு
மனப்பான்மையில் பிதற்றும் பெரியோர்களை
சிந்தனை கொண்ட சிரிப்புடனை கடந்திடுவோம்…..
மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கும்
சமுதாயத்தை உன் முற்போக்கு
சிந்தனையின் முயற்சியிலே முறியடிப்போம்…..
காலை முதல் மாலை வரை கணக்கில்லாமல்
பணிபுரிந்து கடமைக்காக உரிமை திறந்து போராடும்
மாதரே காக்கும் கடவுள் நீயாவாய்….
தினமாயிரம் பிரச்சனைகளை மனதில்
சுமந்து மகிழ் முகத்தை வெளியே
காட்டும் வினோத சிற்பம் நீயே……
பொறுத்தது போதும் பொறுமையும் போதும்
கடல் அலையாய் பொங்கி எழுவாய்
உன் உரிமை உனக்கே ஆகும்……
தான் என்ற எண்ணம் கொண்ட தர்க்கம் செய்யும்
வர்க்கத்திடம் செயலிலே சீர்நோக்கு பார்வையுடன்
சிறப்புடன் செயல்பட்டு வெற்றிக்கனி பெற்றிடுவோம்……
நன்றி – கவிஞர் மேரி ராஜேந்திரன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

