தமிழ் கவிதை தாய்மை (அம்மா) – Tamil Kavithai Amma
உலக தெய்வங்களின் ஓர் உருவம் “அம்மா”..
உன் பெருமை பாட ஈரேழு ஜென்மம் போதாதம்மா…..
கருவறை காதலை விதைத்தாய், என்னிடத்தில்,
பாடுவேன் உன் புகழை, என் கல்லறை வரை…
ஈரைந்து மாதம், கருவினில் சுமந்தாய், என்னை,..
பத்து மாதம், பக்குவமாய் நடை பயின்றாய்,..
பத்திய உணவை, தொப்புள் கொடி,
விருந்தாக்கினாய்…
புரண்டு படுத்தால், சுருண்டு விடுவேன், என்று
தூக்கத்தை தொலைத்தாய்,..
என் பிறப்பில், உன் பிறப்பை, கண்டாய்…
உன் ரத்தத்தை, பாலாக்கி, அமிர்தம் அளித்தாய்…
நான், தவழ்ந்து விழுகையில், உன் மடி தாங்கினாய்,…
நான், நடந்து செல்கையில், என் நிழலானாய்…
பள்ளிப் பருவம் அதில், அறிவுரை ஆசான் ஆனாய்,..
மங்கையாய், மலர்கையில், தோள் கொடுக்கும், தோழியானாய்,…
திருமண பந்தம் அதில், தள்ளி நின்று, விருந்தாளி ஆனாய்,..
தாய்மை அடைந்தேன், உன் நிலை, உணர்ந்தேன்…
என்ன தவம் செய்தேனோ!! உன் கருவில், நான் வளர,
மறுபிறவி உண்டெனில், தாய்,
என் சேயாய், மாறி, என் மடியில்,
தவழ்ந்திட வேண்டும்…..
நன்றி – திவ்யா ராமன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

