தமிழ் கவிதை ஏங்கிய அன்பு Tamil Kavithai Eangiya Anbu – மு.ஷா.நஸ்லுன் சிதாரா
உங்கள் பகைமை என்னோடு – என்
குழந்தையைச் சாராது
உங்களால் புகட்டமுடியா அன்பினை
என்னால் புகட்டிட முடியும்
நால்வர் மத்தியில் நற்பெயர் பெற்றிட
நடமாடும் மாதுவாய் நீரிருந்தாலென்ன? இல்லாதொழிந்தாலென்ன?
நாளையொருநாள் உங்களைத்
திகைத்துத் திக்குத் திணற வைக்கும்
அன்பெனும் முதல்
ஆயுதம் என்குழந்தை – உங்கள்
எதிரில் தோன்றுவான்
எதிரியாய் அல்ல அன்பின் உயர்வாய்…
நன்றி – மு.ஷா.நஸ்லுன் சிதாரா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

