தமிழ் கவிதை சாதீயம் ஒழிய என் யோசனைகள் Tamil Kavithai Saatheeyam Ozhiya En Yosanaikal – நா. தியாகராஜன்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று
பொய்யாமொழியே பறைந்த பின்னே
பள்ளர் என்றும், பறையர் என்றும்
பலசாதி வந்ததெப்படி?
வேர்களைத் தேடி வெட்டினால்தானே
வெந்து சாம்பலாகும் சாதிய தீ
செய்தத் தொழிலாலே சேர்ந்தது சாதியென்றால்
அப்பனின் தொழில்செய்ய கசக்கும்
சுப்பனுக்கு எதற்கு இந்த சாதி
இனி,
சாதி ஒழிப்பு சத்தியப்பிரமாணம்
சபைமொழிதல் வேண்டாம்
சலுகைகளில் கொள்வோம்
சாதிப் பார்த்து வாக்களிக்கும்
சாக்கடை அரசியலுக்கு
சவுக்கடிக் கொடுப்போம்
கல்யான அழைப்பிதழ்களில்
கட்டாயம் சாதிக் குறிக்கமாட்டேன்
கட்டுக்கோப்பைக் கடைப்பிடிப்போம்
கண்டு வளர்க்கும் மகவுகள் – நாளை
கலப்புத் திருமணம் என்றால்
கத்தி எடுக்காமல், காவல் நிற்போம்
மதப்பிரிவினையே போதும் இங்கே
மற்றொரு பிரிவென்று சாதியும் வேண்டாமே
நன்றி – நா. தியாகராஜன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

